VIDEO: எப்பா... ‘வேறலெவல்’ ஸ்டம்பிங்.. ‘RCB ஏலத்துல எடுத்த வீரரா இவரு..!’ இப்பவே இப்படி மாஸ் பண்றாரே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ள இளம்வீரர் ஒருவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

14-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு அணியும் போட்டிப்போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் பல இளம் வீரர்களை ஒவ்வொரு அணியும் எடுத்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தமிழக வீரரான ஹரி நிஷாந்தை ஏலத்தில் எடுத்துள்ளது.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேரளாவை சேர்ந்த இளம்வீரர் முகமது அசாருதீனை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டியில் டைவ் அடித்து ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளாவில் KCA Eagles மற்றும் KCA Tuskers இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இதில் முகமது அசாருதீன் KCA Eagles அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின், 11-வது ஓவரில் KCA Tuskers பேட்ஸ்மேன் ஸ்ரீநாத் பந்தை அருகில் அடித்துவிட்டு சிங்கில் எடுக்க ஓடினார்.
ஆனால் அதற்குள் பந்து பீல்டரில் கையில் சிக்கியதால், மீண்டும் கிரீசை நோக்கி ஓடி வந்தார். அப்போது விக்கெட் கீப்பர் முகமது அசாருதீனிடம் பீல்டர் வேகமாக பந்தை வீச, அவர் டைவ் அடித்து ஸ்டம்பிங் செய்து ஸ்ரீநாத்தை அவுட் செய்தார். அதேபோல், 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்து பேட்டிங்கிலும் முகமது அசாருதீன் அசத்தியுள்ளார்.
RCB's azharudeen wicket keeping skills😍🔥
He also scored 69(43) at 160 strike rate. #KeralaT20 #RCB #IPL2021 pic.twitter.com/WoVnZdU6gm
— as|am (@asIam_as) March 15, 2021
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடியான இளம்வீரர் கிடைத்துள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
