'இந்திய' வீரர்களுக்கு மட்டுமே கிடைக்குற 'மரியாதை'.. 'ஏபிடி'க்கும் கிடைத்த 'தருணம்'.. "கேக்கும் போதே புல்லரிக்குதே.." நெகிழ வைத்த 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் உலகில் அதிரடி வீரர்கள் பெயரை பட்டியலிட்டால், நிச்சயம் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB De Villiers) பெயர் முதல் வரிசையில் இருக்கும்.

சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாது, ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் பலவற்றிலும், மிகச் சிறப்பான ஆட்டத்தை, தனக்கே உரித்தான ஸ்டைலில் டிவில்லியர்ஸ் ஆடியுள்ளார். Mr. 360 என அழைக்கப்படும் அவரது பெயர், கடந்த சில நாட்களாக இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. இதற்கு காரணம், டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆடப் போகிறார் என்பது தான்.
டி 20 உலக கோப்பை போட்டிக்காக, டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச அணியில் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தான் மீண்டும் அணிக்கு திரும்பினால், வேறு சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி, தான் மீண்டும் களமிறங்கப் போவதில்லை என டிவில்லியர்ஸ் கூறியது, அவரது கம்பேக்கிற்கு காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இருந்த போதும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவரது பேட்டிங்கை பார்க்க, ரசிகர்கள் ஆவலுடன் தான் உள்ளனர். அதே போல, டிவில்லியர்ஸிற்கு இந்தியாவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், டிவில்லியர்ஸ் ஆட்டம் பற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), 'தற்போதைய காலக்கட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரையில், தோனி, கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தால், அரங்கமே அதிரும்.
மைதானம் முழுவதும் நிரம்பி நிற்கும் ரசிகர்கள், கரகோஷத்தை எழுப்பி தடல்புடலான வரவேற்பு கொடுப்பார்கள். அது ஒரு தனி மரியாதை தான். அப்படிப்பட்ட ஒரு வரவேற்பையும், மரியாதையையும் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸிற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்துள்ளதை நான் பார்த்துள்ளேன்.
அந்த தருணம், டிவில்லியர்ஸை ஒரு இந்தியர் போல உணர வைத்தது. இந்திய ரசிகர்களின் மனதில், அதிக அன்பையும், பாசத்தையும் டிவில்லியர்ஸ் உருவாக்கியுள்ளார்' என ஆகாஷ் சோப்ரா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
