'PLAYOFF' போனதுல ஒரே குஷியோ.. தமிழ் பசங்க கூட சேர்ந்து.. ஹர்திக் பாண்டியா பாடிய தமிழ் பாடல்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்று போட்டிகளில் இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதம் இருந்தாலும், ஒரே ஒரு அணி மட்டும் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

மும்பை, சென்னை அணிகளைத் தவிர, மற்ற 7 அணிகளும் (MI vs SRH போட்டி முடிவுக்கு முன்பு) பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டி போட்டு வருகிறது.
கடந்த முறை 8 அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கெடுத்திருந்த நிலையில், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள், புதிதாக ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டது.
ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளுமே, ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை, குஜராத் மட்டும் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி, பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்ததாக விளங்கி வருகிறது. இதனால், இந்த முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகவும் குஜராத் டைட்டன்ஸ் அணி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா பாடிய தமிழ் பாடல்
பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி உள்ள குஜராத் அணி, அதனைக் கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. குஜராத் அணியில், தமிழக வீரர்களான விஜய் ஷங்கர், சாய் கிஷோர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த 3 பேருடன் இணைந்து, குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆகியோர் தமிழ் படத்தில் வரும் பாடல் ஒன்றை பாடி உள்ளனர்.
Let's have some 🎶 to celebrate this special #SeasonOfFirsts 🤩#TitansFAM, presenting our very own boy band with a song for the ages 🙌😁#AavaDe #TATAIPL pic.twitter.com/bXdvS1qQzX
— Gujarat Titans (@gujarat_titans) May 17, 2022
தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது அவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இதிலிருந்து வெளியான "Why this Kolaveri" பாடல், பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து, சர்வதேச அளவில் வரை வைரலாகி இருந்தது. இந்த பாடலை, தமிழக வீரர்களுடன் இணைந்து, ஹர்திக் பாண்டியா பாடியுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
