பொண்ணோட செல்போனுக்கு வந்த லிங்க்.. கூடவே ஒரு மெசேஜ்.. கிளிக் பண்ணதும் காத்திருந்த ஷாக்.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபான் கார்டை புதுப்பிக்குமாறு செல்போனுக்கு மெசேஜ் செய்து பெண்ணிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | 10 வயசுல பரோட்டா மாஸ்டர்.. இப்போ உயர்நீதிமன்ற வக்கீல்.. வெறித்தனமா சாதிச்சு காட்டிய சிங்கப்பெண்..!
மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 34 வயதான பெண் ஒருவர் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே 9-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட லிங்க் வந்துள்ளது.
இதை உண்மை என நம்பிய அப்பெண் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது தனியார் வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது. அதில் அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்யுமாறு கேட்க, உடனே அதை பதிவிட்டுள்ளார். அதன்பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வங்கியில் இருந்து செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், வங்கியை தொடர்பு கொண்டு தனது வங்கிக் கணக்கை பிளாக் செய்துள்ளார்.
இதனை அடுத்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதுபோன்று வங்கியின் பெயரில் வரும் போலியான மெசேஜ்களை நம்பி, பயனர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது என வங்கிகளும், போலீசார் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8