‘என்ன பவுலிங் போட சொன்னா அம்பயரை அட்டாக் பண்றீங்க’.. மன்னிப்பு கேட்ட பொல்லார்டு.. சிரித்த ரோகித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு எதிர்பாராவிதமாக அம்பயர் மீது பந்தை வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Also Read | அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்.. கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட ‘உகாண்டா’ பெண்.. விசாரணையில் அதிர்ச்சி..!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 43 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியை பொறுத்தவரை பும்ரா 5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 2 விக்கெட்டுகளும், டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 17.3 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இப்போட்டிகள் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு செய்த செயல் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதில் இப்போட்டியில் 10-வது ஓவரை பொல்லார்டு வீசினார். அப்போது அவர் பந்து வீசிய போது, எதிர்பாராத விதமாக பந்து அவரது கையை நழுவி அம்பயர் மீது விழுந்தது.
உடனே அம்பயரிடம் சென்று பொல்லார்டு மன்னிப்பு கேட்டார். அதற்கு அம்பயரும் சிரித்துக் கொண்டே சரி என தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவும் சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
— Addicric (@addicric) May 9, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8