10 வயசுல பரோட்டா மாஸ்டர்.. இப்போ உயர்நீதிமன்ற வக்கீல்.. வெறித்தனமா சாதிச்சு காட்டிய சிங்கப்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடும்பத்தைக் காப்பாற்ற பரோட்டா போட்ட பெண், இப்போது வழக்கறிஞர் ஆகியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலையில் அருகே சூபி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் அவரது மகள் அனாஷ்வாரா பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக தனது தாய் நடத்தி வரும் ஹோட்டலில் இவர் பல பணிகளை செய்து வருகிறார்.
தனது 10-வது வயதில் பரோட்டா போடும் கலையை அனாஷ்வாரா கற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த பணியை செய்ய, ஒரு கட்டத்தில் பரோட்டா மாஸ்டராகவே அவர் மாறியுள்ளார். இதனிடையே தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டம் பயின்று கொண்டே பரோட்டா போடும் பணியை அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கறிஞராகப் பட்டம் பெற்ற அவர், எர்ணாகுளத்தை சேர்ந்த மனோஜ் பி ஜார்ஜ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். இதனை அடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அனாஷ்வாராவுக்கு வேலை கிடைத்துள்ளது.
நேற்று முதல்நாள் வழக்கறிஞராக வேலைக்கு செல்லும் முன்பு பரோட்டா சமைத்துக் கொடுத்து விட்டே அனாஷ்வாரா சென்றுள்ளார். தற்போது வழக்கறிஞராக உயர்ந்திருந்தாலும் பரோட்டா போடும் பணியை தொடர்ந்து செய்து தாய்க்கு உதவியாக இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது பலரும் அனாஷ்வாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8