‘போட்டியை ஒத்திதான் வச்சிருக்கோம், நிறுத்தல’!.. மறுபடியும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்?.. ஐபிஎல் தலைவர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என ஐபிஎல் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் வீரர்கள் வீடு திரும்புவதற்கு தேவையான உதவுகளையும் செய்து கொடுப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனிடையே ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மொத்தம் 60 போட்டிகள் கொண்டு ஐபிஎல் தொடரில், இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் Cricbuzz சேனலில் பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் (Brijesh Patel), வரும் செப்டம்பர் மாதம் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பு உள்ளதா என பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாகவும், அப்படி அந்த மாதம் நடத்த வாய்ப்பு இருந்தால் ஐசிசியுடன் ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஐபிஎல் தொடர் ஒத்திதான் வைக்கப்பட்டுள்ளது, நிறுத்தப்படவில்லை என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதன்மூலம் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
