'4 வருஷமா விளையாடுறாரு... அப்படி என்ன சாதிச்சாருனு கேட்டா.. 'இத' எடுத்து காட்டுங்க'!.. லைசண்டாக சம்பவம் செய்த தீபக் சஹார்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடர் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் சிறப்பாக நடந்துவந்தது. ரசிகர்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்களை தந்து வந்தது. 29 போட்டிகளை கடந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் காலகட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
வேக வேகமாக நடத்தப்படும் இந்த தொடர்களில் சாதனைகளுக்கும், அதே போல காயங்களுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. தினந்தோறும் பலவகையான சாதனைகள் அரங்கேறி வருகின்றன. அத்துடன் தினந்தோறும் காயங்களால் அவதியுறும் செயல்களும் நடந்துதான் வந்தன.
வேகமாக நடந்து முடியும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒரு பந்தில் அடிக்கப்படும் ஒரு சிக்ஸ் அல்லது ஒரு பவுண்டரி அந்த ஆட்டத்தின் போக்கையே மாற்றும் செயல்களும் இந்த ஐபிஎல் 2021 தொடரின் சில போட்டிகளிலேயே நாம் பார்க்க முடிந்தது. ஐபிஎல்லில் மெய்டன் ஓவர் என்பது மிகவும் அரிதானது.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடர்களில் கடந்த 2018 முதல் நடைபெற்ற தொடர்களில் அதிகமாக மெய்டன் ஓவர் போட்டவர் என்ற பெருமையை தீபக் சஹர் பெற்றுள்ளார். மொத்தம் 50 இன்னிங்சில் ஆடியுள்ள அவர் 6 மெய்டன் ஓவர்களை போட்டுள்ளார். இதில் அடுத்ததாக முகமது சிராஜ் 36 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 மெய்டன் ஓவர்களை போட்டுள்ளார்.
இதேபோல 41 மற்றும் 55 இன்னிங்ஸ்களில் விளையாடி போல்ட் மற்றும் ரஷீத் கான் முறையே 4 மெய்டன் ஓவர்களையும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா முறையே 17 மற்றும் 52 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 மெய்டன் ஓவர்களையும் போட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
