‘நான் கண்ண கசக்கிட்டு பார்த்தா’... ‘இந்திய அணியை தாறுமாறாக தூர்வாரி’... ‘சந்தோஷப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 20, 2020 11:06 AM

இந்திய அணி குறைந்த டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஸ்கோரை பதிவு செய்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் அதை கிண்டல் செய்துள்ளார்.

Shoaib Akhtar lashes out at India’s ‘disgraceful’, ‘terrible’ batting

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் மிக மோசமாக சொதப்பியது. 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிக மோசமான ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இந்திய அணியின் மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோராக இருந்தது. ஆசிய அணிகள் வரலாற்றிலும் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து இருந்தது இந்திய அணி.

இதை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் கடும் விமர்சனம் செய்துள்ளார். ‘முந்தைய தினம் இரவு நான் போட்டியை பார்க்கவில்லை. காலையில் டிவியை போட்டுப் பார்த்தேன். இந்தியா 369 ரன்கள் எடுத்து இருந்ததாக ஸ்கோர் போர்டு காட்டியது. அப்புறம் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தேன். அது 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என தெரிந்தது. ஒருவர் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி விட்டார். இது அவமானகரமான தோல்வி.

அவமானகரமான பேட்டிங். உலகின் வலிமையான அணி நொறுங்கி சரிந்து விழுந்தது. மேலும் பாகிஸ்தான் அணியின் குறைந்த ஸ்கோரை இந்தியா முறியடித்து விட்டது.  இதனால் இந்தியாவின் தோல்வி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கிரிக்கெட்டில் எப்போதும் இது சகஜம். முதல் இன்னிங்சில் ரஹானேவால் விராட் கோலி ரன் அவுட் ஆகவில்லை என்றால், அவர் 150 முதல் 200 ரன்கள் எடுக்க வாய்ப்பிருந்திருக்கும். இதனால் அந்த அணி வெற்றிபெற முடிந்திருக்கும். இந்த தோல்வியிலிருந்து மீண்டுவர இந்தியாவிற்கு சில வருடங்கள் ஆகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shoaib Akhtar lashes out at India’s ‘disgraceful’, ‘terrible’ batting | Sports News.