'பேசாம கன்கஷன் மூலமா அவர மாத்திடுங்க’... ‘இந்திய அணியின் இளம் வீரரால்’... 'நொந்துப் போன ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் துவக்க வீரரான ப்ரித்விஷா, பேட்டிங்கில் சொதப்புவதுடன், இன்று ஃபீல்டிங்கிலும் கேட்சை தவறவிட்டதால் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.
ஃபார்ம் அவுட்டில் உள்ள ப்ரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போதே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில் அவர் ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு இருந்ததால் சில போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் பயிற்சி போட்டிகளிலும் சொதப்பினார். இதனால் கே.எல்.ராகுல் அல்லது ஷுப்மன் கில்லை டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி அவரை அணியில் சேர்க்க மாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளித்து அதிர்ச்சி அளித்தார் விராட் கோலி. விராட் கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில், நேற்று அடிலெய்டில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 2-வது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து, அவரை அணியில் தேர்வு செய்த விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியையும் சேர்த்தே விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போதும் அவர் மோசமாக செயல்பட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்த போது அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டார் ப்ரித்வி ஷா.
இதையடுத்து ரசிகர்கள் அவரை மீண்டும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில ரசிகர்கள் ப்ரித்வி ஷாவுக்கு தலையில் அடிபட்டது எனக் கூறி அவருக்கு பதில் இந்த டெஸ்டில் வேறு வீரரை ஆட வையுங்கள் என கூறியுள்ளனர். பேட்டிங்கில் தான் டக் அவுட் ஆனார் என்று நினைத்தால், ஃபீல்டிங்கிலும் சொதப்பியதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ANOTHER chance for Marnus! #AUSvIND pic.twitter.com/zl25xRJjIX
— cricket.com.au (@cricketcomau) December 18, 2020
At this rate Prithvi Shaw would be subbed off by a concussion sub. He surely needs a century if he wants to stay in the team.
— Unakenada Eriyidhu (@RaayapurumPeter) December 18, 2020
While attempting Marnus Labuschagne’s catch it seemed as if Prithvi Shaw is in a park on a vacation. Prithvi over KL Rahul was sure to be a blunder #AUSvIND
— Rohan Chhabra (@AdvRohanChhabra) December 18, 2020
Prithvi Shaw can't even take catches 🤦#INDvAUS
— Mihir Jha ✍️ (@MihirkJha) December 18, 2020