"இந்தியா 'வேர்ல்ட் கப்' ஜெயிச்சு இன்னையோட 10 வருஷம் ஆயிடுச்சு.." ஊரே கொண்டாடுற நேரத்துல.. ஆதங்கப்பட்ட 'கம்பீர்'... 'பரபரப்பு' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 2 ஆம் தேதி. இந்த நாளை அத்தனை எளிதில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறந்து விட முடியாது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு, தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 50 ஓவர் உலக கோப்பையை வென்று அசத்தியிருந்தது. பல ஆண்டுகளாக இருந்த ஏக்கத்திற்கு, இந்திய அணியின் இந்த வெற்றி பதிலளித்திருந்த நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவும், இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தது.
இந்நிலையில், இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனதையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், அந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய அணியின் வெற்றி குறித்து, உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கவுதம் கம்பீர் (Gautam Gambhir), 10 ஆண்டுகள் நிறைவு ஆனதையொட்டி, உலக கோப்பை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'2011 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரின் இந்திய அணியில் நான், முனாப் படேல், ஹர்பஜன் சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா என அனைவரும் பல போட்டிகளில், மிக முக்கிய பங்கினை அளித்திருந்தோம். இப்படி அனைத்து வீரர்களின் பங்களிப்பும் நம்ப முடியாதவை. அதே போல, அந்த உலக கோப்பையில், தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்று.
ஆனால், 10 ஆண்டுகள் கழித்து இந்த தொடரை நினைத்து பார்த்தால், நான் மேற்கூறிய அனைவரது பங்களிப்பை பற்றி யாரும் பேசவில்லை. எல்லோரும், தோனி அடித்த கடைசி சிக்ஸ் பற்றியே பேசுகிறார்கள். மேலும், இறுதி போட்டியில், என்னுடைய இன்னிங்ஸ், யார் கவனத்தில் படாமல் போனதாக கூறுகிறார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில், யுவராஜ் சிங் தான் அந்த தொடரின் unsung ஹீரோ. அவர் மட்டும் இல்லையென்றால், இந்திய அணி உலக கோப்பையை வெல்வதே கடினமாகி இருக்கும்.
ஒரு அணியின் வெற்றிக்கு தனி ஒருவரின் ஆட்டம் மட்டும் வெற்றியை பெற்றுத் தந்து விட முடியாது. அனைவரின் ஒத்துழைப்பும் தான் இந்திய அணி வெற்றி பெற வழி வகுத்தது' என உலக கோப்பை நினைவுகள் குறித்து சற்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
