'இந்த பொண்ண ஞாபகம் இருக்கா'?... 'இது என்னோட டைம்'... டிரம்பை பழிக்குப் பழி வாங்கிய 'கிரேட்டா'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 06, 2020 12:55 PM

உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம் என ஐநா சபையில் கர்ஜித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. சுற்றுச்சூழல் குறித்து அவர் ஐநாவில் பேசியதை உலகமே வியந்து பாராட்டிய நிலையில் அமெரிக்க அதிபர் கடுமையாக விமர்சித்ததோடு, ட்விட்டரில் கிண்டல் செய்தார். இவ்வளவு ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம் குறித்து சிறிதும் யோசிக்காமல் உலக நாடுகள் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என உலக தலைவர்கள் முன்னிலையில் கிரேட்டா கர்ஜித்ததை உலகமே வியந்து பார்த்தது.

Greta Thunberg Trolls Trump With His Own Words

அதேபோன்று கிரேட்டா ஐநா சபையின் தலைமையகத்தில் நுழையக் காத்திருந்த நேரத்தில் அவரை முந்திக்கொண்டு டிரம்ப் நுழைந்த நிலையில், கிரேட்டா டிரம்பை அவர் முறைத்துப் பார்த்த புகைப்படம் உலக அளவில் பெரும் வைரலானது. அதேபோன்று தனக்குக் கிடைக்க இருந்த Person of the year விருதையும் கிரேட்டா தட்டி செல்ல மிகவும் கடுப்பான டிரம்ப், கிரேட்டவை கிண்டல் செய்யும் விதமாக, கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

நண்பருடன் சினிமார்விற்கு செல்லலாம். கோபப்படாத கிரேட்டா, கூலாக இரும்மா என ட்வீட் செய்திருந்தார். இதை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த கிரேட்டாவிற்கு, தற்போது மொத்தமாகத் திருப்பி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என டிரம்ப் ட்வீட் செய்திருந்தார். தற்போது கிரேட்டாவும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி டிரம்ப்யை கிண்டல் செய்துள்ளார்.

Greta Thunberg Trolls Trump With His Own Words

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் டிரம்ப், ஒரு நண்பருடன் சினிமாவிற்கு செல்லலாம், கூலாக இருங்கள் எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.  கிரேட்டா தன்பெர்க் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் வைரலாகி வரும் நிலையில், டிரம்பிற்கு இது தான் சரியான பதிலடி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Greta Thunberg Trolls Trump With His Own Words | World News.