காயம்பட்ட ஓனர் மாதிரியே நடை.. தொழிலதிபர் பகிர்ந்த கியூட் நாயின் வீடியோ.. அந்த CAPTION தான் செம்ம..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்து உள்ள நாயின் வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பலருக்கும் நாய்கள் வளர்ப்பது மிகவும் பிடித்துப்போய் விடுகிறது. எப்போதும் நம்மையே சுற்றி சுற்றி வரும் நாய்களை தங்களது வீட்டில் உள்ள ஒரு உறுப்பினர் போலவே சிலர் கருதுவதும் உண்டு. பழங்காலத்திலேயே நாய்களை மக்கள் தங்களது வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்த்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. தங்களது உரிமையாளர்களின் கடினமான நேரங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவை நாய்கள். இந்நிலையில், தொழிலதிபரும் இந்திய பணக்காரர்களில் ஒருவருமான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்திருக்கும் நாய் ஒன்றின் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஹர்ஷ் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். தன்னம்பிக்கை அளிக்கும் கருத்துகள், வெடிச்சிரிப்பை வரவழைக்கக்கூடிய வீடியோக்கள் என அவரது ட்விட்டர் பக்கம் பலரையும் மகிழ்விக்கவல்லது. இதனாலேயே இவரை 1.7 மில்லியன் மக்கள் ட்விட்டரில் பின் தொடர்ந்து வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த கோயங்கா, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த கோயங்கா அதைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் MBA படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
கோயங்கா பகிர்ந்திருக்கும் இந்த வீடியோவில் ஒருவர் தனது நாயினை பிடித்துக்கொண்டு காலை தாங்கியபடி நடந்து வருகிறார். அவரது வலது காலில் காயமடைந்து கட்டுக்கட்டி இருப்பதால் அந்த காலை அவர் தாங்கி தாங்கி நடக்க, அவருடன் வரும் நாயும் தனது ஒரு காலை தூக்கியபடி நடந்து வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் கோயங்கா அந்த பதிவில்,"நாய்கள் எப்போதும் தங்களுடைய உரிமையாளர்களையே பின்பற்றுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரையில் 9 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், நாய்கள் குறித்த தங்களது பார்வையையும் நெட்டிசன்கள் கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
Dogs always follow their master…pic.twitter.com/bK0NbrZ8Vu
— Harsh Goenka (@hvgoenka) October 2, 2022