"சென்னை சேப்பாக்கத்துல தோனியும் ஜடேஜாவும் கால் வச்சா போதும் விசில் பறக்கும்" ..சின்ன தல ரெய்னா உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் சிஎஸ்கே விளையாட இருப்பது குறித்து ரெய்னா உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | தனக்குத்தானே 1000 ரூபாய் அபராதம் விதித்துக்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ்.. பின்னணி என்ன?
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் ஐபிஎல் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்விற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா பற்றியும் தோனி குறித்தும் பேசியுள்ளார். அப்போது,"காயத்திலிருந்து திரும்பியுள்ள ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அருமையாக செயல்பட்டு வருகிறார். நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரில் தோனிக்கு பக்க பலமாக இருப்பார்." என்றார்.
தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்து பேசிய ரெய்னா,"ருத்துராஜ் கெய்க்வாட் தனது முதல் ஆட்டத்தை சேப்பாக்கத்தில் விளையாடுகிறார். அவர் ஒரு சிறந்த வீரர், நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். MS தோனியும் சேப்பாக்கத்திற்குச் சென்று அனைத்து 'விசில் போடு' மற்றும் 'எல்லோவ்' ரசிகர்களுடனும் உரையாட ஆர்வமாக இருப்பார். இது மிகவும் உற்சாகமாக இருக்கும், நாங்கள் அங்கு வெற்றியுடன் தொடங்குவோம் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கே விளையாடுவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் நிச்சயம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என தெரிவித்திருக்கும் ரெய்னா, நடப்பு ஐபிஎல் தொடரை காண ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படும் ரெய்னா, சேப்பாக்கம் மைதானம் பற்றி பேசியிருப்பது ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "பழைய பீரோவை வரதட்சணையா கொடுக்குறாங்க".. தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை.. மணப்பெண் அதிரடி முடிவு..!

மற்ற செய்திகள்
