"தோனி முடிவு பண்ணிட்டா.. கடவுளே தடுத்தாலும்".. ஹர்பஜன் சிங்கின் தெறியான தமிழ் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.
இதையடுத்து சென்னையில் லக்னோவை எதிர்கொண்டது CSK. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேவரைட் ஆப்போஸிஷன் அணியான மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் ஜடேஜா, சாண்ட்னரின் மந்திர சூழலில் மும்பை சிக்கி சின்னாபின்னமானது.
இதன் பலனாக அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி சேஸிங்கில் இறங்கியது. கான்வே டக்கில் வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்துவந்த ரஹானே மும்பை பவுலர்களை அலறவிட்டார். 27 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். மற்றொருபுறம் ருதுராஜ் நிதானமாக ஆட, அவருடன் கரம்கோர்த்த ராயுடு அணியினை வெற்றிபெற செய்தார். 18.1 ஓவரில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில்,"தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான். குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது. IPL-ல் இவனை வெல்ல எவன் இங்கு" என குறிப்பிட்டுள்ளார்.
தல #தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான்.குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த @ChennaiIPL க்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது.@IPL யில் இவனை வெல்ல எவன் இங்கு #Thala #CSKvsMI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 8, 2023

மற்ற செய்திகள்
