VIDEO: எல்லாரும் சிக்ஸ் அடிச்சதும் பந்தைதான் பார்ப்பாங்க.. ஆனா கோலி என்ன பண்ணாரு தெரியுமா..? ‘செம’ மாஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர் இணைத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் (IPL) தொடரின் 35-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB) மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களும், கேப்டன் விராட் கோலி 53 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதில் பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) அடித்த சிக்சர் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், போட்டியின் 5-வது ஓவரை சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் (Shardul Thakur) வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி, அதை சிக்சருக்கு விளாசினார்.
— Simran (@CowCorner9) September 24, 2021
— Rishobpuant (@rishobpuant) September 24, 2021
அப்போது பந்தை அடித்துவிட்டு உடனே அது சென்ற திசையை பார்க்காமல் ஷர்துல் தாகூரை நோக்கியே விராட் கோலியின் பார்வை இருந்தது. அதன்பின்னர் தான் பந்து சென்ற திசையை விராட் கோலி பார்த்தார். அந்த அளவுக்கு அவர் அடித்த பந்து சிக்சருக்கு சென்றிருக்கும் என விராட் கோலி உறுதியாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
