VIDEO: தோனியை அவுட்டாக்க முடியாத விரக்தி.. தரையை ஆக்ரோஷமாக அடித்த SRH-ன் புதுவரவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) தொடரின் 44-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி (Dhoni), பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 எடுத்தது.
இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சாஹா 44 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்களும், டு பிளசிஸ் 41 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்றுக்கு முதல் அணியாக சிஎஸ்கே நுழைந்துள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் ஜேசன் ராய் (Jason Roy), ஆக்ரோஷமாக மைதானத்தில் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இப்போட்டியின் சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தார்.
#CSKvsSRH pic.twitter.com/0xgI75BZ1S
— Prabhat Sharma (@PrabS619) September 30, 2021
அப்போது அங்கு நின்ற ஜேசன் ராய் டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால் அவரால் பிடிக்கமுடியவில்லை. தோனியின் விக்கெட்டை தவறவிட்ட விரக்தியில் ஆக்ரோஷமான ஜேசன் ராய், கோபமாக தரையை கையால் அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கள் கிழமை ராஜஸ்தான் ராயல் (RR) அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக ஜேசன் ராய் களமிறங்கினார். அப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
