‘இந்த தப்பை மட்டும் ப்ளே ஆஃப்-ல பண்ணிறவே கூடாது’!.. RR-க்கு எதிரான மேட்சில் சறுக்கியது எங்கே..? எச்சரிக்கை செய்த தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் 47-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளும், சேத்தன் சக்காரியா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 17.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 64 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni), ‘இப்போட்டியில் டாஸை நாங்கள் இழந்திருக்க கூடாது. மைதானத்தில் பனியின் தாக்கம் போக போக அதிகமாகிவிட்டது. அதனால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பந்து செல்ல ஆரம்பித்தது. இதை ராஜஸ்தான் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.
முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை அவர்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டனர். தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், அதன்பின் வந்த வீரர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடினர். அணியில் தீபக் சஹார், பிராவோவுக்கு பதிலாக மாற்றுவீரர்களை களமிறக்கினோம். திடீரென இரண்டு வீரர்களை மாற்றியிருக்கக் கூடாது. இப்போட்டியை மறந்துவிடலாம், ஆனால் இதிலிருந்து கற்ற பாடத்தை மறக்கக்கூடாது. இதேபோல் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றில் நடந்தால், அங்குபோய் படம் கற்றுக்கொண்டு இருக்க முடியாது’ என தோனி கூறியுள்ளார்.
இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தில்தான் உள்ளது. அதேபோல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
