‘சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிய தோனி’!.. சிஎஸ்கே அணியில் இப்படியொரு ‘சாதனை’ படைத்த முதல் வீரர் நம்ம ‘தல’ தான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஷார்ஜா மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்றுக்கு செல்லும் முதல் அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி (Dhoni) 3 கேட்சுகளை பிடித்து அசத்தியிருந்தார். விருதிமான் சாஹா, ஜேசன் ராய், ப்ரியம் கார்க் ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளை கேட்ச் பிடித்து தோனி வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகளை பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
முன்னதாக ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்திருந்தார். இதற்கு முன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த சாதனையை படைத்திருந்தார். சமீபத்தில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கை அவுட் செய்ததன் மூலம் அவரின் சாதனையையை தோனி முறியடித்தார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா (98 கேட்சுகள்) இரண்டாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்டு (94 ரன்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.