'சின்ன விஷயம் தான்... 'இது' மட்டும் நடந்தா போதும்... ரோகித் இரட்டை சதம் CONFIRM'!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... சாதிக்குமா இந்தியா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியில் யார் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.
சர்வதேச டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தற்போது அசுர பலத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. எனவே, அதே நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும்.
எனவே, இங்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா தான் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால் வெகு சீக்கிரமாக முதல் விக்கெட் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் அட்டாக்கிங் ஜோடி தான் இந்த போட்டிக்கு சரியாக இருக்கும் என முன்னாள் வீரர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரோகித் - சுப்மன் கில் ஜோடி அவ்வளவு ரிஸ்க் ஆனது இல்லை. அவர்களை போன்ற அட்டாக்கின் ஓப்பனிங் இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரோகித் சர்மா மட்டும் அதிரடி காட்டினால் நிச்சயம் இரட்டை சதம் அடிப்பார். எதைப்பற்றியும் யோசிக்கக்கூடாது.
களத்திற்கு சென்று நமது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆக்ரோஷ ஆட்டம் மிக முக்கியம். களத்திற்கு சென்றவுடன் முதல் அரை மணி நேரத்திற்கு நிதானமாக பிட்ச்-ஐ கணித்து ஆட வேண்டும். பின்னர் களத்தில் செட்டில் ஆன பிறகு அதிரடியை தொடங்க வேண்டியது தான்.
இதுதான் கிரிக்கெட்டில் கடந்த 100 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ரோகித் சர்மாவும் அப்படி தான் செய்வார் எனக் கூறியுள்ளார். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 1030 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் 2 அரைசதங்களும் அடங்கும்.

மற்ற செய்திகள்
