"என்னங்க பிட்ச் இப்படி இருக்கு.. ICC தலையிடனும்".. கொதித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள்.. போட்டிக்கு முன்னாடியே வந்த சிக்கல்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் மைதானத்தின் பிட்ச் குறித்து தற்போது விவாதம் எழுந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, நாளை (பிப்ரவரி 09) ஆரம்பமாகிறது. அதன் பின்னர் டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
நாளை நாக்பூர் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க பல விதமான பயிற்சிகளில் ஆஸி. வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் ஆடுகளம் குறித்த புதிய சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது.
நாக்பூர் மைதானத்தின் பிட்ச்-ன் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் அதுவே இந்த விவாதத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. அதாவது அந்த புகைப்படத்தில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே உள்ள பகுதி வறண்டு இருப்பது போல காட்சியளிக்கிறது. மற்ற இடங்களில் வாட்டரிங் எனப்படும் தண்ணீர் ஊற்றப்பட்டு உள்ள நிலையில் அந்த பகுதியில் மட்டும் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் வகையில் அப்படியே விடப்பட்டிருப்பதாக முன்னாள் ஆஸி. வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Simon O’Donnell இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தலையிட வேண்டும் எனவும் ICC-யின் அதிகாரிகள் இந்த போட்டியை நேரில் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி இதுபற்றி பேசுகையில் இந்தியர்களுக்கு சாதகமாக இருக்கும்படி இந்த பிட்ச் தயார் செய்யப்பட்டுள்ளதாக நினைப்பதாக தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
