ஒன்றரை வருசத்துக்கு அப்புறம் ‘மீண்டும்’ இடம்.. நியூஸிலாந்து அணியில் கலக்கி வரும் ‘இந்திய’ வம்சாவளி வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தற்போது இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியின்போது நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால் தற்போது அவர் ஓய்வில் உள்ளதால், டாம் லாதம் கேப்டனாக நியூஸிலாந்து அணியை வழி நடத்தி வருகிறார். அதேபோல் அணியிலும் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வில் யங், டாம் பிளன்டல், டேரில் மிட்சல், அஜஸ் படேல், மேட் ஹென்றி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் அஜஸ் படேல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இந்தியாவின் மும்பையில் பிறந்த அஜஸ் படேல், கடந்த 2018-ம் ஆண்டு, முதன்முதலாக நியூஸிலாந்து அணியில் இடம் பிடித்தார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். அதன்பின் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அஜஸ் படேலுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.