'எங்க நாட்டுல உள்ள ப்ளேயர்ஸ் இனி திருப்பி வர்றது கஷ்டம் தான்...' 'ஏன் அப்படி சொல்றேன்னா...' - பீதிய கெளப்பும் முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயோ பபிளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வருட ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் தான் என இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வாரிய இயக்குனரும் முன்னாள் வீரருமான ஆஷ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார்
மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் முதலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாட இருக்கும் சர்வதேச போட்டிகளில் இவர்கள் பங்கேற்பது நிச்சயம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் ஆனால் திட்டமிட்டபடி சர்வதேச போட்டிகள் தேசிய அணிக்காக விளையாட வேண்டி இருந்தால் மீதமுள்ள இந்த வருட ஐபிஎல் சீசன் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது கண்டிப்பாக சந்தேகம் தான் சர்வதேச போட்டிகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அவர்கள் இந்திய மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் இலங்கை இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுடன் இங்கிலாந்து அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது 20 உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணி விளையாட இருப்பதாலும், மேலும் நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.