VIDEO: நீங்க இப்படி உடைஞ்சு போய் ‘அழுகுறத’ இப்போதான் பாக்குறோம்.. ‘யுனிவெர்ஸ் பாஸ்’-க்காக உருகிய ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் தனது தாயை நினைத்து கண்கலங்கிய சம்பவம் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை இவர் படைத்துள்ளார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக கிறிஸ் கெய்ல் விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்ல் தான் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 357 சிக்சர்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், 245 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதனிடையே ஐபிஎல் தொடரில் விளையாடிய சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இதில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையே விமான சேவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அவர்களுடன் கிறிஸ் கெய்லும் மாலத்தீவில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி சர்வதே அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது மறைந்த தனது தாயை நினைத்து கிறிஸ் கெய்ல் கண்கலங்கினார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கண்ணீர் நிற்கவில்லை அம்மா. எனக்கு தெரியும் என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள். உங்கள் சிரிப்பை என்றுமே நான் மிஸ் செய்வேன் அம்மா’ என கிறிஸ் கெய்ல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
— Infidel 2.0 (@Infidel_strike) May 10, 2021
கிறிஸ் கெயில் தாய், கடந்த 2018-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் ரசிகர்களால் ‘யுனிவெர்ஸ் பாஸ்’ என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், தனது தாயை நினைத்து கண்கலங்கியது கிரிக்கெட் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
