பரபரப்பா மேட்ச் நடக்கும்போது.. ரசிகர்கள் போட்ட கோஷம்.. மொத்த ஸ்டேடியமும் அப்படியே ஷாக் ஆகிடுச்சு.. வைரலாகும் வீடியோ..! FIFAWC2022
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஈகுவேடார் - கத்தாருக்கு இடையேயான கால்பந்து போட்டியில் ஈகுவேடார் ரசிகர்கள் தங்களுக்கு பீர் வேண்டும் என ஸ்பானிஷ் மொழியில் கோஷமிட்ட வீடியோ இணையத்தில் தற்போது படுவைரலாக பரவி வருகிறது.

Also Read | "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? உலக மக்களின் பெரும் எதிர்பார்களுக்கு இடையே துவங்க இருக்கிறது இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது. இதனிடையே போட்டியின்போது, ஈகுவேடார் அணி ரசிகர்கள் தங்களுக்கு பீர் வேண்டும் என ஸ்பானிஷ் மொழியில் கோஷமிட்டனர். இதனால் மைதானமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது.
முன்னதாக, கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் இடங்களில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கத்தார் நாட்டின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு மைதானங்கள் அருகே மது விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கால்பந்து சம்மேளனமான FIFA அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், கத்தார் - ஈகுவேடார் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தங்களுக்கு மது வேண்டும் என கோஷமிட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே, ஒருபால் ஈர்ப்பு கொண்ட ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக கத்தார் அரசு எடுத்த முடிவுகள் விவாதமாகின. இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடர் துவங்கிய உடனேயே மைதானங்களுக்கு அருகே மதுவிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
La hinchada #ECU ya tiene el primer hit del #FIFAWorldCup : “Queremos cerveza, queremos cerveza” pic.twitter.com/Pk91fYLug5
— Javier Lanza (@javierlanza) November 20, 2022
இதனிடையே, தங்களுக்கு பீர் வேண்டும் என ஈகுவேடார் அணி ரசிகர்கள் மைதானத்தில் கோஷமிட்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | "என் முதல் குழந்தை என் கையிலயே..."..எலான் மஸ்க்கின் சோக பக்கம்.. உருக்குலைய வைத்த ட்வீட்..

மற்ற செய்திகள்
