'பெட்டி பெட்டியா பணம்'... 'ஹெலிகாப்டரில் இடம் இல்லன்னு தூக்கிப்போட்ட பணம் மட்டும் இவ்வளவா'?... 'ஆப்கான் முன்னாள் அதிபர் பதுங்கியுள்ள நாடு'... திடுக்கிடும் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்நாட்டை விட்டுத் தப்பியோடிய ஆப்கான் முன்னாள் அதிபர் பதுக்கியுள்ள நாடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படியான ஆட்சியை நிறுவியது. அப்போது முதல் கடந்த 20ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள், நேட்டோ, ஐரோப்பியப்படைகளுடன் தாலிபான்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவந்தனர்.
ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளியேறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தாலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். இதையடுத்து காபூல் நகருக்குள் தாலிபான்கள் வந்துவிட்டதை உறுதி செய்த அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே அவர் ஆப்கானை விட்டுத் தப்பியோடிய போது கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிச் சென்றார் எனவும் தகவல்கள் வெளியானது. மேலும் ஹெலிகாப்டர் நிரம்பியதால் மீதமிருந்த பணத்தை அவர் ஓடுபாதையிலே விட்டுச் சென்றதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதேநேரத்தில் அஷ்ரப் கானி சென்ற விமானம் தஜிகிஸ்தானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் ஓமன் நாட்டிற்குச் சென்றதாகத் தகவல்கள் பரவியது. இந்தச்சூழ்நிலையில், நாட்டை விட்டுத் தப்பியோடிய அஷ்ரப் கானி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் குடியேறியுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி காபூல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற போது அஷ்ரப் கானி 5 மில்லியன் பவுண்டுகளை எடுத்துச்செல்ல முயன்றதாகவும், ஆனால் இறுதி நேரத்தில் பணத்தை வைக்க இடம் இல்லாத காரணத்தினால் மீதமிருந்த பண கட்டுகளை விமான நிலையத்திலே விட்டுச்சென்றதாக காபூல் நியூஸ் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
