'என்கிட்ட அவரு கடைசியா பேசுறப்போ சொன்ன விஷயம் இது...' 'கொரோனாவினால் மறைந்த டாக்டர் சைமன் உடலை...' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர். அவர் சிகிச்சை அளித்த நோயாளிகளிடம் இருந்து அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஏப்ரல் 19-ம் தேதி மருத்துவர் சைமன் மறைந்தார்.
இதனையடுத்து மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது மனைவி ஆனந்தி சைமன் உருக்கமாக பேசியபடி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட பார்க்க கூட முடியவில்லை என வலிமிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
தன்னுடன் மருத்துவர் சைமன் கடைசியாக பேசிய வீடியோ அழைப்பில், ஒருவேளை மீண்டு வரவில்லை என்றால், அவரது மதச் சடங்குகளின்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யுமாறு கூறியதாக ஆனந்தி சைமன் உருக்கமாக தெரிவித்தார்.
இதனால், தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் எஎன்று ஆனந்தி சைமன் அழுதபடியே வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்டது.
தற்போது மனைவியின் கோரிக்கையை ஏற்று சைமன் உடலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆவடி வேலங்காடு இடுகாட்டிலிருந்து பாதுகாப்புடன் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Anandi Simon, wife of Dr Simon Hercules, requests TN CM to enable removal of her husband's body from Velangadu for a proper burial in kilpauk. This is so sad! And it's the least we could do #coronavirusinindia #DoctorSimon pic.twitter.com/4MeBcNPRKo
— Poornima Murali (@nimumurali) April 21, 2020