'அவரு தோனியவே மிஞ்சிடுவாரு!.. கில்க்ரிஸ்ட்ட ஓரம் கட்டிருவாரு'!.. பங்காளி சண்டையை மறந்து... இந்திய அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட், எதிர்காலத்தில் தோனி, கில்க்ரிஸ்ட் ஆகிய 2 பேரையும் பின்னுக்கு தள்ளுவார் என முன்னாள் வீரர் கூறியுள்ளார். அவர் எந்த அடிப்படையில் அப்படி கூறினார் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று வகை பார்மேட்டுகளிலும் ரிஷப் பண்ட் மிகச்சிறந்த ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். டெஸ்ட் தொடரில் மொத்தமாக 6 இன்னிங்சில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 270 ரன்கள் அடித்து இந்தியாவை பொருத்தவரை இரண்டாவது அதிகபட்ச ரன் ஸ்கோரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரில் இவரது அவரேஜ் 54 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 84.11 ஆகும்.
பின்னர், நடந்த டி20 தொடரிலும் மிகச்சிறப்பாக அதிரடியாக ஆடி உள்ளார். டி20 தொடரில் மொத்தமாக நான்கு இன்னிங்ஸில் விளையாடி 102 ரன்களை குவித்துள்ளார்.
அதன் பின்னர் தற்பொழுது நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரில் மொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் இது விளையாடி 155 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஆவரேஜ் 77.55 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151.96 ஆகும்.
அதுமட்டுமின்றி மொத்த தொடரிலேயே அதிகபட்ச ஸ்கோர் செய்த 3 வீரர்களுள் ரிஷப் பண்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி – 532 ரன்கள், ரிஷப் பண்ட் அண்ட் – 527 ரன்கள், ரோகித் சர்மா – 526 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், "நான் பண்ட்-ஐ கடந்த ஏழு எட்டு மாதமாக கவனித்து வருகிறேன். அவரது ஆட்டம் மிக அபாரமாக மற்றும் தனித்து இருக்கிறது. இவர் ஆடி வருவதை நான் இதற்கு முன்பு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மகேந்திர சிங் தோனியிடம் கண்டுள்ளேன். அவர்களைப் போலவே மிக அதிரடியாக ஆடி அணியின் போக்கை அப்படியே திசை திருப்பும் ஆற்றலுடைய வீரராக ரிஷப் பண்ட் திகழ்ந்து வருகிறார்.
மூன்று வகை கிரிக்கெட் பார்மேட்டுகளிலும் ரிஷப் பண்ட் நாளுக்கு நாள் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் மற்றும் கீப்பிங்கிலும் தனது திறமையை எல்லோருக்கும் காண்பித்துக் கொண்டு இருக்கிறார். ரிஷப் பண்ட் இப்படியே சில காலங்களுக்கு தனது ஆட்டத்தை சிறப்பாக தொடர்ந்தால் நிச்சயம் பின்னாளில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மகேந்திர சிங் தோனியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி விடுவார் என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
