"இப்டியே போனா 'எப்படி'ங்க கப் ஜெயிக்குறது??..." இதுக்கு ஒரு முடிவே இல்லையா???... கலக்கத்தில் 'டெல்லி' அணி... 'காரணம்' என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 14, 2020 06:42 PM

ஐபிஎல் சீசனில் முதல் பாதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

players getting injured in delhi capitals is a big problem

இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான டெல்லி அணி இந்த முறை மிகசிறந்த பலத்துடன் காணப்படுகிறது. ஆனால், அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருப்பது சில முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது தான்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், காயம் காரணமாக அதே போட்டியில் பாதியில் விலகினார். பின்னர் 2 ஆட்டங்களுக்கு பிறகே அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினார். players getting injured in delhi capitals is a big problem

அஸ்வினைத் தொடர்ந்து மற்றொரு அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ராவும் காயம் காரணமாக, இந்த தொடர் முழுவதிலும் இருந்தே விலகினார்.  அதே போல, வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இப்படி அடுத்தடுத்து டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியாக டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், கடந்த போட்டியில் ஆடவில்லை. players getting injured in delhi capitals is a big problem

பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வீரர்கள், அனுபவம் மிக்க வீரர்கள் என இரண்டும் கலந்த அணியாக டெல்லி அசத்தி வரும் நிலையில், இப்படி காயம் காரணமாக முன்னணி வீரர்கள் போட்டியில் இருந்து விலகுவது அந்த அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவு தான். players getting injured in delhi capitals is a big problem

லீக் சுற்றின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளிலும் டெல்லி அணி சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Players getting injured in delhi capitals is a big problem | Sports News.