"இப்படியும் நடக்குமா???..." - 'ஒரே BALL-ல ரெண்டு முறை OUT ஆன 'முக்கிய' வீரர்!'... 'அடுத்தடுத்து நடந்த ஆச்சர்யம்... இன்ப அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!!!' - என்ன நடந்தது???
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வீரர் ரஷீத் கான் ஒரே பந்தில் இரண்டு முறை அவுட்டான வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அந்தப் போட்டியில் நடந்த வித்தியாசமான சம்பவம் ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஹைத்ராபாத் அணியின் 19வது ஓவரின் கடைசி பந்தில் ரஷீத் கான் சிக்ஸ் அடிக்க முயன்று கிரீஸுக்கு பின் சென்று பந்தை அடித்தார். அது லாங் ஆன் திசையில் நின்றுகொண்டிருந்த தீபக் சாஹரின் கையில் கேட்ச் ஆனது.
ஆனால் அதற்குள்ளேயே ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் ரஷீத். பந்தை பின்னால் சென்று அடிக்க முயன்ற ரஷீதின் கால்கள் ஸ்டெம்பில் பட்டதாலேயே அவர் அவுட்டானார். அப்போது அந்தப் பந்தை லாவகமாக பிடித்த தீபக் சாஹர் நான் பிடித்த கேட்ச்சில் அவர் அவுட்டாகவில்லையா என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தார். கிரிக்கெட் களத்தில் நடந்த இந்த காட்சி மிகவும் அரியது என்பதாலும், வித்தியாசமான முறையில் முக்கிய வீரர் ஆட்டமிழந்ததாலும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
Rashid Khan wicket (Hit Wicket + caught out)🏏#CSKvsSRH #csk #RashidKhan #SRH #dhoni #umpire #IPL2020 pic.twitter.com/0SDaRUP6eT
— Ryan De Sa (@ryandesa_07) October 13, 2020

மற்ற செய்திகள்
