நெறைய பேர் ‘இதத்தான்’ கேட்பீங்கன்னு தெரியும்.. அதான் நானே போட்டுட்டேன்.. அஸ்வின் போட்ட ‘கலக்கல்’ கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் விக்கெட்டை எடுத்த ஹைதராபாத் அணி வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான நடராஜனுக்கு அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 19-வது ஓவரை ஹைதராபாத் அணி வீரரும், தமிழக வீரருமான நடராஜன் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி, அதை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்தே கேன் வில்லியம்சனிடம் கொடுத்து தோனி அவுட்டானார்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளுருமான அஸ்வின் எடுத்த நேர்காணல் ஒன்றில் நடராஜன் கலந்து கொண்டார். அப்போது யாருடைய விக்கெட்டை எடுத்தால் சாதனையாக கருதுவீர்கள் என அஸ்வின் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு தோனியின் விக்கெட்டை எடுப்பதைதான் சாதனையாக நினைப்பதாக நடராஜன் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் அவரது கனவு நிறைவேறியுள்ளது.
இதற்கு நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த நேர்காணல் வீடியோவில் அஸ்வின் ஒரு கமெண்ட் செய்துள்ளார். அதில், ‘யாரெல்லாம் தோனி விக்கெட்டை நடராஜன் எடுத்தபின் இந்த வீடியோவை பார்க்கிறீர்கள்? அப்படின்னு நெறைய பேர் போடுவீங்கனு தெரியும். அதான் நானே போட்டேன். வெல்டன் நட்டு’ என கலக்கலாக அஸ்வின் கமெண்ட் செய்துள்ளார்.
Well done da @Natarajan_91 👏👏 . Great moment for you.🔥🔥 https://t.co/pJz2gkwXqK
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) October 13, 2020

மற்ற செய்திகள்
