'ஆமா, இது அவரோட TRICKல?!!'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னைக்கும் ஹைதரபாத் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியில் இருந்து ஜெகதீசன் நீக்கப்பட்டுவிட்டு அவருக்கு பதிலாக சாவ்லா அணியில் எடுக்கப்பட்டார். மேலும் சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்கிய சாம் கரன் 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். அதன்பின் பேட்டிங் இறங்கிய வாட்சன், ராயுடு இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் முதல் பவர்பிளேவில் அதிரடியாக ஆட முடியாமல் கடுமையாக திணற, 4வது ஓவரிலேயே டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே இருவரும் ஆட்டமிழந்தார்கள்.
அதன்பின் 10வது ஓவரில் ஜானி பிரைஸ்டோ அவுட்டாக, சாம் கரன் போட்ட 4வது ஓவரும், ஜடேஜா போட்ட 10வது ஓவரும் ஆட்டத்தையே மாற்றியது. ஆனால் இன்னொரு பக்கம் பிரியம் கார்க் அவுட் ஆன பின்பும் கூட கேன் வில்லியம்சன் களத்தில் உறுதியாக நின்றார். இங்குதான் தோனி ஓவரில் மாற்றம் செய்தார். 15வது ஓவர் வரை தோனி பியூஸ் சாவ்லாவிற்கு ஓவர் கொடுக்கவில்லை. 16வது ஓவர்தான் சாவ்லா ஓவர் போடவே வந்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது.
சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் சிஎஸ்கே 160+ ஸ்கோரை சேஸிங் செய்தபோது இதையே தான் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் ரசல் மற்றும் நரேனுக்கு ஓவர் கொடுக்காமல் 13 ஓவருக்கு பின் இருவரும் பவுலிங் செய்ய, அவர்களை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்திக்கின் அதே பிளானுடனேயே தோனியும் நேற்று பவுலர்களை களமிறக்கினார். 15 ஓவருக்கு பின் சாவ்லா, பிராவோ, கரன் சர்மா மட்டுமே பவுலிங் செய்தனர். அதில் கரண் சர்மா ஓவரில் சிஎஸ்கேவை அச்சுறுத்தி வந்த கேன் வில்லியம்சன் அவுட்டானார்.
ஆனால் அதன்பின் ரஷீத் கான் அடுத்தடுத்து சிக்ஸ் பவுண்டரி அடித்து ஆட்டத்தை மாற்ற, 18வது ஓவரில் ஹைதராபாத் 19 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ரன் செல்கிறது எனத் தெரிந்ததும் ஷரத்துல் தாக்கூருக்கு தோனி ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சென்றது. ரஷீத் கானும் அந்த ஓவரில் அவுட்டானார். கடைசி ஓவரில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பந்து வீசிய பிராவோ வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுக்க 1 விக்கெட் விழுந்த நிலையில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்படி இந்தப் போட்டியில் தோனி கொடுத்த பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.