'அந்த பார்டர தாண்டியாச்சு!.. இனி மொத்த மேட்ச்சையும் கோலி டேக் ஓவர் பண்ணிடுவாரு'!.. நியூசிலாந்துக்கு பறந்தது வார்னிங்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மிகப்பெரும் ஆட்டத்தை வெளிப்படுத்த காத்துள்ளார். அதனை அவரின் 30 ரன்கள் ஃபார்முலா உறுதி செய்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் மளமளவென விக்கெட் எடுத்த நியூசிலாந்து பவுலர்கள், தற்போது சிரமப்பட்டு வருகின்றனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு இவர்கள் 62 ரன்களை சேர்த்தனர். அப்போது நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா (34) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சுப்மன் கில் (28), புஜாரா (8) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன் பிறகு, ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரஹானே ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக, விராட் கோலி நிதானமாக விளையாடி அரை சதம் கடக்கும் நிலையில் உள்ளார். இதுவரை 124 பந்துகளை சந்தித்துள்ள அவர் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மேலும் கோலி - ரஹானே பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்துள்ளது. இந்திய வீரர் விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 30 ரன்களை கடந்துவிட்டால் அவரை நிறுத்துவது கடினமான ஒன்றாகும். இதற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 30 ரன்களை கடந்த பிறகு, ஒரு முறை இரட்டை சதமும், 2 சதங்களும், 3 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 2 முறை மட்டுமே அரை சதம் அடிக்காமல் தவறியுள்ளது.
இதே போல இங்கிலாந்து மண்ணிலும் விராட் கோலி 30 ரன்களை கடந்துவிட்டால், மிகப்பெரும் ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மண்ணில் கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை 8 முறை விராட் கோலி 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் 3 முறை அரைசதமும், 2 முறை சதமும் விளாசியுள்ளார். எனவே, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கோலி 30 ரன்களை கடந்துள்ளதால் மிகப்பெரும் ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
