Beast Others

IPL 2022: அதிகரிக்கும் கொரோனா.. BCCI எடுத்த முக்கிய முடிவு.. கலக்கத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Apr 16, 2022 07:47 PM

டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI.

Covid hit DC not to hug shake hands with RCB says BCCI

கொரோனா

நடப்பு ஐபிஎல் தொடர் மும்பையில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக இந்தியா முழுமையும் போட்டிகளை நடத்தவில்லை எனவும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் BCCI அறிவித்திருந்தது. மேலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக அணி வீரர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் பயோ பபுளில் தங்கிவருகின்றனர்.

Covid hit DC not to hug shake hands with RCB says BCCI

இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின்  பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹாத் மற்றும் சில உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை எனவும் அவர் 7 நாட்களுக்கு குவாரன்டைனில் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Covid hit DC not to hug shake hands with RCB says BCCI

BCCI

இந்நிலையில், ஏப்ரல் 16 (இன்று) நடைபெறும் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடையேயான போட்டியில் முக்கிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது பிசிசிஐ. அதன்படி, போட்டியின்போது டெல்லி அணி வீரர்கள் பெங்களூரு அணி வீரர்களுடன் கைகுலுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI அறிவித்துள்ளது.

Covid hit DC not to hug shake hands with RCB says BCCI

மேலும், டெல்லி வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மேட்சில் விளையாடாத பிற வீரர்கள் முகக்கவசம் அணிவதோடு பானங்களை அருந்தவோ, உணவு உட்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசன்

இதேபோல, கடந்த சீசனில் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 3 வார காலமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில் இப்போது ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #IPL2022 #COVID #DC #RCB #கொரோனா #ஐபிஎல் #டெல்லிகேப்பிடல்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Covid hit DC not to hug shake hands with RCB says BCCI | Sports News.