“தோனி சொன்ன அந்த அட்வைஸ்”.. RCB அணிக்கு எதிரா சிக்சர் மழை பொழிந்த CSK சிவம் துபே சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி கூறிய அறிவுரை குறித்து சிவம் துபே பகிர்ந்துள்ளார்.
‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிவம் துபே, தோனி கூறிய அறிவுரை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘நிறைய சீனியர் வீரர்களிடம் பேசினேன். அதில் மஹி பாய் என்னுடைய விளையாட்டு மேம்பட உதவினார். கவனமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். விளையாட்டில் நமது திறமைதான் வேலை செய்ய வேண்டும் என தோனி கூறினார். நேற்று பந்து நன்றாக வந்தது. என்னுடைய ஆட்டத்தை சீராக வைத்திருக்க முயற்சி செய்தேன்’ என சிவம் துபே கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வியடைவது இதுவே முதல் முறை. இந்த சூழலில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.