IPL 2022: ‘இது நடக்குற வரை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”.. பெண் ரசிகை எழுதியிருந்த அந்த வாசகம்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பெண் ஒருவர் பதாகையுடன் மைதானத்தில் நின்ற போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சிவம் தூபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணியை பொறுத்தவரை ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், முகேஷ் சௌத்ரி மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பெண் ரசிகை ஒருவர் பதாகையுடன் கேலரி நின்று கொண்டிருந்தார். அதில், ‘ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என எழுதியுள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் கடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட்கோலி விலகினார். இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Amit Mishra at it again 😂#Cricket #RCB #AmitMishra #IPL #IPL2022 #CricTracker pic.twitter.com/lGYjblsSGa
— CricTracker (@Cricketracker) April 13, 2022
‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!

மற்ற செய்திகள்
