‘மனசில நின்னுட்டீங்க தலைவா’.. டாஸ் வின் பண்ணதும் டு பிளசிஸ் சொன்ன வார்த்தை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பின் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் சொன்ன வார்த்தை ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி இன்று (12.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற பின் டு பிளசிஸ், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது என்பது, எனது சகோதரர்களுடன் விளையாடுவது போன்றது’ என கூறினார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
டு பிளசிஸ், நீண்ட ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வந்துள்ளார். பல போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற இவர் காரணமாக இருந்துள்ளார். இந்த சூழலில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி டு பிளசிஸை எடுத்தது. தற்போது அந்த அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
