'அவருக்கு சரியான கிரிக்கெட் மூளை...' 'அவரு பந்த ஃபேஸ் பண்றதே வித்தியாசமா இருக்கும்...' - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கிறிஸ் மோரீஸ்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021ஆம் ஆண்டுக்காண ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் கேரளாவை சேர்ந்த சஞ்சு விஸ்வநாத் சாம்சனை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
கடந்த முறை இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது இளம் வீரரான சஞ்சுவை கேப்டனாக நிர்ணயித்து உள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் மோரீஸ், சஞ்சு சாம்சனுடன் தான் கொண்டுள்ள உறவை குறித்து செய்தியாளருடன் பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரீஸ், 'எங்களுடைய அணியில் இருக்கும் சஞ்சுவுடன் எனக்கு மிகச்சிறப்பான உறவு இருக்கிறது. அவரை இளம் கேப்டனாக பார்க்கக்கூடாது, அவருக்கு மிகச்சிறப்பான கிரிக்கெட் மூளை உள்ளது' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'சாம்சன் சிறப்பான ஐடியாக்களுடன் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்ப்போடு இருக்கிறேன். சிறப்பான விக்கெட் கீப்பராக விளங்கும் சாம்சன், வித்தியாசமான கோணங்களில் பந்தை அணுகுகிறார்.
போட்டிகளையும் மிகவும் சீரியசாக அணுகுவார், தற்போது புதிய கேப்டனின் கீழ் விளையாட தான் காத்திருக்கிறேன், கண்டிப்பாக அவருக்கு 100 சதவிகித ஒத்துழைப்பை வழங்கஉள்ளேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
