‘ஹோட்டல் ரூம்ல WIFI சரியா கிடைக்கல’!.. ரசிகர்களிடம் ஒரு ஆலோசனை கேட்ட, முன்னாள் CSK வீரரும், இன்னாள் DC வீரருமான விக்கெட் கீப்பர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹோட்டல் அறையில் WiFi சரியாக கிடைக்கவில்லை என டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ட்வீட் செய்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இதற்கு அடுத்து நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளன. இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அணியின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதால், சிஎஸ்கே வீரர்கள் மும்பை சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருமான சாம் பில்லிங்ஸ், தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் அறையில் WiFi சரியாக கிடைக்கவில்லை என ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்தியாவில் பயன்படுத்த சிறந்த WiFi dongle எது? என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
Only one way to decide....
Jio or Airtel WiFi Dongle?
— Sam Billings (@sambillings) March 30, 2021
இதனை அடுத்து ஜியோ அல்லது ஏர்டெல் இவற்றில் எதை பயன்படுத்தலாம்? என ரசிகர்களிடம் கருத்துக் கேட்டு சாம் பில்லிங்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.