அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில தவானே விளையாட வாய்ப்பில்லையா..? அப்போ கேப்டன் யாரு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது. அதனால் உடனே போட்டி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த 8 இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் இலங்கை நாட்டின் விதிகளில்படி 8 வீரர்கள் மீண்டும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஒத்திவைக்கப்பட்ட டி20 போட்டி இன்று (28-07-2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் ஷிகர் தவான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய அணிக்கு கேப்டனாக யார் பொறுப்பேற்க உள்ளார்? என கேள்வி எழுந்துள்ளது.
Shikhar Dhawan also will not be available for the remaining of the T20i series against Sri Lanka as he's in isolation. (Reported by Sports Tak).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 28, 2021
Hearing that Shikhar Dhawan will be in isolation. So wondering who'll captain the side? I guess it'll be Bhuvneshwar Kumar
— Sarang Bhalerao (@bhaleraosarang) July 28, 2021
So #TeamIndia will see new captain as Shikhar Dhawan also will not be available for the remaining of the T20i series against Sri Lanka as he's in isolation. (Reported by Sports Tak).#INDvsSL #SLvsIND #SportsTak
— Jainish Patel (@Jainish_Patel18) July 28, 2021
அதன்படி தற்போது துணைக் கேப்டனாக இருக்கும் புவனேஷ்வர் குமார் இந்திய அணியை கேப்டனாக வழி நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 2 டி20 போட்டிகளிலே உள்ள நிலையில், க்ருணால் பாண்ட்யாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.