வறுமையில் வாடிய வினோத் காம்ப்ளி.. பிசினஸ்மேன் கொடுத்த JOB OFFER.. சம்பளத்தை கேட்டு நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதான் வறுமையில் கஷ்டப்படுவதாகவும் தனக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் உதவவேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அவருக்கு வேலை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
![Businessman Offers Vinod Kambli INR 1 Lakh Per Month Job Businessman Offers Vinod Kambli INR 1 Lakh Per Month Job](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/businessman-offers-vinod-kambli-inr-1-lakh-per-month-job.jpg)
வினோத் காம்ப்ளி
இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இணைந்து பல சாதனைகளை படைத்துள்ளனர். சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகிய இருவரும் அடுத்தடுத்து இந்திய அணியில் தேர்வாகி இருந்தனர். ஆரம்பத்தில், தனது சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளால் வினோத் காம்ப்ளி கவனம் ஈர்த்திருந்தார். இதுவரையில் 104 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் வினோத் விளையாடி இருக்கிறார்.
உதவி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வினோத் 2019 ஆம் ஆண்டு, மும்பையின் டி 20 லீக் தொடர் ஒன்றில், ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக, நிலைமை தலைகீழாக மாற, பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கும் வினோத் காம்பிளி தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் காம்ப்ளி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில்,"BCCI தரும் பென்சன் பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது எனது குடும்பம். அதற்காக நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இருப்பினும் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு வேலை வேண்டும். மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் எனக்கு உதவ வேண்டும்" என உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார்.
வேலை
இந்நிலையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வினோத் காம்ப்ளிக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மஹாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சஹ்யாத்ரி தொழில் குழுமம் வினோத் காம்ப்ளிக்கு தனது நிதித்துறையில் பணி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை நிம்மதியடைய செய்திருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)