"எனக்கு ஆட்டநாயகன் விருது வேணாம்".. பகீர் கிளப்பிய பாகிஸ்தான் கேப்டன்.. காரணம் தெரிஞ்சதும் நெகிழ்ந்துபோன கிரிக்கெட் ரசிகர்கள்..வைரல் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கு இந்தியத் தீவுகள் உடனான ஒருநாள் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, குஷ்தில் ஷா-விற்கு வழங்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முதல் போட்டி
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் மேற்கு இந்தியத் தீவுகள் நேற்று முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமாடியது. முல்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் ஷாய் ஹோப் மற்றும் மயேர்ஸ் ஓப்பனிங் செய்தனர். அபாரமாக விளையாடிய ஹோப் சதமடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகளின் ப்ரூக்ஸ் மற்றும் ரோமன் பாவல் ஆகியோர் காட்டிய அதிரடியால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது.
சேசிங்
இதனைத் தொடர்ந்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தானின் ஃபக்கர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி. சமான் 11 ரன்னில் வெளியேறினாலும் அடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரிஸ்வான் 59 ரன்னிலும், பாபர் 103 ரன்னிலும் அவுட்டாக, மேட்சில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது களத்திற்கு வந்த குஷ்தில் ஷா 23 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெறவைத்தார். 49.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, பாகிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது.
விருது வேண்டாம்
இதனையடுத்து, இந்த போட்டியில் சதமடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவிய பாபர் அசாமிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மேடைக்கு சென்ற பாபர், தனக்கு இந்த விருது வழங்கப்படுவதைக் காட்டிலும் போட்டியின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்த குஷ்தில் ஷா-க்கு வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மற்றும் அணி வீரர்கள் நெகிழ்ந்துபோயினர். அதன்பிறகு குஷ்தில் ஷா-க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Beautiful gesture from the skipper 😍@babarazam258 gives his player of the match award to @KhushdilShah_ 🏆👏#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/7BrSiV7TyL
— Pakistan Cricket (@TheRealPCB) June 8, 2022

மற்ற செய்திகள்
