இசைக் கச்சேரியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. பிரபல கால்பந்தாட்ட வீரரின் மனைவி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇசைக் கச்சேரியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கால்பந்து வீரரின் மனைவி
தென் அமெரிக்க நாட்டின் பராகுவேயில் (Paraguay) உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பராகுவே கால்பந்து வீரர் இவான் டாரஸின் (Ivan Torres) மனைவி கிறிஸ்டினா விட்டா அரண்டாவும் (Cristina Vita Aranda) கலந்து கொண்டுள்ளார்.
இசைக் கச்சேரியில் துப்பாக்கி சூடு
இந்த நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனை அடுத்து வேகமாக அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் டாரஸின் மனைவி கிறிஸ்டினாவும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாடல் அழகி
இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டினா உடற்பயிற்சியாளரும், மாடல் அழகியும் இருந்து வந்தார். கால்பந்து வீரர் இவான் டாரஸூம், அவரது மனைவி கிறிஸ்டினாவும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
விஐபி பகுதில் இருந்த கிறிஸ்டினா
கிறிஸ்டினா, இசைக் கச்சேரி அரங்கின் விஐபி பகுதியில் இருந்தபோதுதான், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் கிறிஸ்டினாவின் தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே கணவர் இவான் டாரஸ் மற்றும் உதவியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு கிறிஸ்டினா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிந்து வாழ முடிவு
கால்பந்து வீரர் இவான் டாரஸும் அவரது மனைவி கிறிஸ்டினாவும் கடந்த 10 ஆண்டு காலமாக தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் கிறிஸ்டினா துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.