'அந்த சானிடைசர கொண்டு வாங்கப்பா...' 'பழக்கதோசத்துல பண்ணிட்டாரு போல...' - பவுலருக்கு எச்சரிக்கை விடுத்த அம்பயர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டத்தொடரில், வீரர்கள் உமிழ் நீரை பயன்படுத்தகூடாது என்பதை மறந்து இங்கிலாந்து வீரர் உமிழ் நீரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து 112 ரன்னில் விடைபெற்றது.
அதன் பின் களமிறங்கிய இந்தியா தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 12-வது ஓவரில் பந்து வீசும் போது, பந்து பளபளப்பாக தவறுதலாக உமிழ் நீரை பயன்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்தின் மீது உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தெரிவித்துள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் செய்த செயல் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் அந்த பந்தை வாங்கிய நடுவர், பந்தை சானிடைசரால் சுத்தம் செய்து, நட்பாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
