VIDEO: 'அந்த கொரோனாவ இப்போ வந்து என்ன அட்டேக் பண்ண சொல்லுங்க பாப்போம்...' 'வாய்ப்பே இல்ல ராஜா...' - கொரோனா வைரசிற்கே டிமிக்கி கொடுக்கும் நபர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றை நம்மை அணுக விடாமல் செய்ய கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சானிடைசரால் கைகளை கழுவ வேண்டும் எனவும் அரசும், சுகாதார அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், இதையும் தாண்டி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து போய் நிற்கிறது. இதை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் மக்களிடம் தண்டோரா போட்டு கூவினாலும் பெரிதளவில் பயனில்லை.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் தன்னை தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மாஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிளாஸ்டிக்கால் ஆன அல்ட்ரா சைஸ் பந்து உள்ளே இருந்துக்கொண்டு பாதுகாப்பாக அவர் வெளியில் நடமாடி வருகிறார். ஏதோ சாகசம் செய்யப்போகிறார் என நினைத்தால் அவர் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க அந்த ராட்சஸ பந்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டுள்ளார்.
வாகனங்கள் இருபுறமும் சென்று கொண்டிருக்க அதன் இடையே சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டில் அந்த பந்துக்குள் நின்றபடி தினமும் சாகச பயணம் மேற்கொள்கிறார் அந்த இளைஞர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவரிடம் இதுகுறித்து கேட்டபோது ‘‘நான் எந்தவொரு சாகசமும் செய்யவில்லை. கொரோனாவில் இருந்து என்னை பாதுகாக்க சமூக இடைவெளியை இயற்கையாக ஏற்படுத்த விரும்பியே இந்த பந்துக்குள் நின்றபடி செல்கிறேன். அப்போது பொதுமக்கள் என்னை நெருங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதுடன் காற்றில் பறந்து வரும் கொரோனா நான் இருக்கும் பந்து என்னும் கவசத்தை தாண்டி உள்ளே வர முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் நகரம் அருகேயுள்ள பெல்கிரேவ் நகரில் தான் இந்த காட்சியை பார்க்க முடிகிறது. ‘கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மாஸ்க்கை விட சிறந்த சாதனமாக இந்த பிளாஸ்டிக் பந்தில் செல்வது இருக்கும்’’ என கூறப்படுகிறது. மேலும் இவர் சாலையில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 1.6 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.