தீபாவளிக்கு ஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்ய முயன்ற பெண்.. "கொஞ்ச நேரத்துல 2.5 லட்ச ரூபாய காணோம்".. அரண்டு போய்ட்டாங்க..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Oct 26, 2022 03:35 PM

பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் தீபாவளிக்காக ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்திருந்த நிலையில், அதன் பின்னர் அரங்கேறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

woman try to orders sweet in online lost more than 2 lakhs report

Also Read | ரெயில்வே டிக்கெட் மாதிரியே 'கல்யாண' அழைப்பிதழ்.. இதுல PNR நம்பர் இதுவா..? வேற லெவல்.‌

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடி இருந்தார்கள்.

புத்தாடைகள் உடுத்து, பட்டாசுகள் வெடிக்க செய்து, பலகாரங்கள் தயார் செய்து என முற்றிலும் வண்னண மயமான  தீபாவளியை அனைவரும் அசத்தலாக கொண்டாடி இருந்தார்கள்.

அந்த வகையில், மும்பையை அடுத்த அந்தேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய முடிவு எடுத்துள்ளார். அதன் படி, பூஜா ஷா என்ற அந்த 49 வயது பெண், செயலி ஒன்றின் மூலம் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். அப்போது இதற்கான கட்டணமாக 1,000 ரூபாயை அவர் ஆன்லைன் மூலம் செலுத்தும் போது, பண பரிவர்த்தனை தோல்வி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அடுத்தடுத்து சில முயற்சிகள் செய்த பிறகும் பந்தை பூஜாவால் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த ஸ்வீட் கடையின் நம்பரை ஆன்லைன் மூலம் எடுத்து நேரடியாக அந்த கடைக்கு அழைத்து பேசி உள்ளார். தொடர்ந்து பூஜாவிடம் பேசிய நபர், க்ரெடிட் கார்டு எண் மற்றும் OTP உள்ளிட்ட விஷயங்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

woman try to orders sweet in online lost more than 2 lakhs report

அதனை நம்பி பூஜாவும் அனைத்து விவரங்களையும் அந்த நபரோடு பகிர அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை பறிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய போன இடத்தில் லட்ச ரூபாய் பறிபோனதால் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் பூஜா.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக இதுகுறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை அவர் அளித்துள்ளார். இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமார் 2,27,000 ருபாய் வரை மற்ற வங்கி கணக்கில் செல்வதை தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பற்றியும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read | கவாஸ்கர், ரவி சாஸ்திரி பலரும் இங்க சாப்ட்டு தான் மேட்ச் ஆட போவாங்களாம்.. வைரலாகும் ஆஸ்திரேலிய தமிழ் 'தம்பதி'!!

Tags : #MUMBAI #WOMAN #ORDER #ORDERS SWEET #ORDER ONLINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman try to orders sweet in online lost more than 2 lakhs report | India News.