'என்ன கோலி இவர எல்லாம் அனுப்புராரு?'... 'ஈவு இரக்கமே இல்லாம அடிச்சு நொறுக்குறாங்க'... 'இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கேப்டன் கோலி எடுத்த முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியின் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 390 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 389/4 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்தியா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளையை இழந்து திணறி வருகிறது.
இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கேப்டன் கோலி எடுத்த முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இன்று இந்திய அணியின் பவுலர்கள் யாரும் சரியாக பவுலிங் செய்யவில்லை.
பும்ரா, ஷமி, சாஹல், சைனி என்று இன்று பவுலிங் செய்த யாருமே சரியாக பந்து வீசவில்லை. இன்று பவுலிங் செய்தவர்களில் ஜடேஜா, பாண்டியா மட்டுமே கொஞ்சம் சிறப்பாக ஆடினார்கள்.
பாண்டியா 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். ஜடேஜா 7 ஓவர்களை நன்றாக வீசினாலும் கடைசி மூன்று ஓவர்களை சரியாக வீசவில்லை. இதனால் இந்திய கேப்டன் கோலி 6வது பவுலராக யாரை அனுப்பலாம் என்று ஆலோசனை செய்து வந்தார்.
இதையடுத்து இன்று மயங்க் அகர்வாலை பவுலிங் செய்ய கோலி அனுப்பினார். 6வது பவுலராக மயங்க் அகர்வால் இன்று ஓவர் செய்தார். இவர் ஒரு ஓவர் போட்டு அதிலும் 10 ரன்கள் கொடுத்தார்.
இந்திய பவுலர்கள் சரியாக பவுலிங் செய்யாத நிலையில் மயங்க் எல்லாம் வந்து பவுலிங் செய்யும் நிலை ஏற்பட்டது. மயங்க் எல்லாம் பவுலிங் செய்யும் அளவிற்கு இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது.
இந்த நிலையில், மயங்க் அகர்வாலும் இன்று 10 ரன்களை ஒரு ஓவரில் கொடுத்தார். இந்த நிலையில் பாண்டியாவிற்கு அதன்பின் கோலி ஓவர் கொடுத்தார். இந்திய அணியில் 6வது பவுலர் பிரச்சனை தற்போது உருவாகி உள்ளது.
இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் கேப்டன் கோலி எடுத்த முடிவுகள் பெரிய அளவில் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருந்தது.

மற்ற செய்திகள்
