‘என்ன ஒரு வேகம்’... ‘டைவ் அடிச்சும் முடியல’... ‘ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்’... !!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், இரண்டாவது ஒரநாள் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்டம்பிங் ரன் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி இன்று களத்தில் இறங்கியது. டாஸ் வென்ற உடன் பேட்டிங்கை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இன்றி பீல்டிங்கில் களமிறங்கினர்.
முதல் போட்டியைப் போன்றே, இன்றும் ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை கொடுத்து வந்தது. விக்கெட்டுகள் இன்றி 142 ரன்கள் அந்த அணி சேர்த்தநிலையில், துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தார். இதையடுத்து நம்பிக்கை துளிர்விட இந்திய அணி பீல்டிங் செய்தது.
இந்நிலையில், 25 ஓவரில் 3 பந்தை ரவீந்திர ஜடேஜா வீசினார். அப்போது, ஸ்டீவ் ஸ்மித் தயங்கினாலும், டேவிட் வார்னர் ஓடி வந்ததைப் பார்த்த 2 ரன்கள் எடுக்க இருவரும் முற்பட்டனர். அப்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஓடிவந்து பாலை எடுத்து, தூரத்தில் இருந்து வீசிய ஸ்டம்பிங்கை நோக்கி வீசினார்.
டேவிட் வார்னர் வேகமாக ஓடிவந்தும், அவர் வருவதற்கு முன்னதாக ஸ்டம்பிங்கில் சரியாக பந்து பட்டதால், அவர் அவுட் ஆனார். இதனால் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டிருந்த டேவிட் வார்னர், 83 ரன்களில் அவுட் ஆனதால் கடுப்பானார். தற்போது ஆஸ்திரேலிய அணி, 50 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, 389 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
Spot on 🎯
A brilliant direct hit from Shreyas Iyer and David Warner is run out!
A big wicket for India 💥
📝 #AUSvIND scorecard 👉 https://t.co/h5IaKNPjkbpic.twitter.com/u3prXgKJGS
— ICC (@ICC) November 29, 2020