'இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா'!.. ரோஹித் இடத்தை நிரப்பும்... கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பர்!.. சீறும் ரோஹித் ரசிகர்கள்!.. 'திட்டமிடப்பட்டதா?.. தற்செயலா'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இடம்பெற போகும் வீரர் யார் என்பதை கோலி இன்று அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்த பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று நடக்க உள்ளது. ஒருநாள், டி 20, டெஸ்ட் என்று நடக்க உள்ள மிக நீண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்க உள்ளது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையே மோதல் நடக்கிறது. இந்த வருடத்தின் மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. காயம் காரணமாக இவர் முதல் இரண்டுதொடரிலும் ஆடவில்லை.
டெஸ்ட் தொடரில் இவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால். டெஸ்ட் தொடருக்கு முன் இவரின் காயம் குணமாக வேண்டும். அதேபோல் இவர் மீண்டும் பிட்னஸ் பெற வேண்டும். இதன் காரணமாகவே தற்போது இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இடம்பெற போகும் வீரர் யார் என்பதை கோலி இன்று அறிவித்துள்ளார். அதன்படி இந்திய அணியில் ஓப்பனிங் வீரராக மயங்க் அகர்வால் இடம்பிடித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் வீரராக இருந்த இவர் கடந்த ஐபிஎல் தொடரில் தன்னை சிறந்த டி 20 வீரர் என்றும் நிரூபித்தார். இந்த நிலையில் தற்போது இந்திய ஒருநாள் அணியில் சேர்ந்து ஆடும் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர்தான் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஓப்பனிங் இறங்குவார்.
ரோஹித் சர்மா உடல் எடை மற்றும் பிட்னஸ் காரணமாக அதிகமாக கஷ்டப்படும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன் அவர் ஓரம்கட்டப்படலாம்.
மயங்க் அகர்வால் நன்றாக ஆடும் பட்சத்தில் அவருக்கு நிரந்தர இடம் கூட கிடைக்கும். இந்திய அணியில் ஓப்பனிங் இறங்க போகும் வீரர் கே.எல் ராகுல்தான் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரை ஐந்தாவது இடத்தில் களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார்.
இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாக உள்ளது. பெங்களூரை சேர்ந்த மயங்க் அகர்வால் தற்போது பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார். ஆனாலும், கர்நாடக கிரிக்கெட் போர்ட் மூலம் கோலிக்கு மயங்க் அகர்வால் மிகவும் நெருக்கமான நண்பர் ஆனார்.
இந்த நிலையில் தற்போது ரோஹித்திற்கு பதிலாக தனது நெருங்கிய நண்பர் மயங்க் அகர்வாலுக்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
