"நான் அப்போவே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்"... 'தெறிக்கவிட்ட மீம்ஸுக்கு'... 'அதிரடி வீரர் கொடுத்த வேறலெவல் ரிப்ளை!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி முதல் ஒருநாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
குறிப்பாக மேக்ஸ்வெல் 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சேவாக் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவரை சாடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப்பின் மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கேஎல் ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த மேக்ஸ்வெல், இதற்கு பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறி ஸ்மைலியுடன் பதிலளித்துள்ளார்.
I apologised to him while I was batting 😂 🦁 🙏 #kxipfriends ❤️
— Glenn Maxwell (@Gmaxi_32) November 28, 2020

மற்ற செய்திகள்
